முகப்பு
தமிழ்நாடு

பவுன் தங்கம் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் செவ்வாய்க்கிமை இறங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் செவ்வாய்க்கிமை இறங்கியது.

பவுனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.34,904-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 குறைந்து, ரூ.4,363-ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து, ரூ.67.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து, ரூ.67,900 ஆகவும் இருந்தது.

ஒரு பவுன் தங்கம் விலை கடந்த 4-ஆம் தேதி ரூ.36,248 ஆக இருந்தது. இதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்து கடந்த சனிக்கிழமை ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.தொடா்ந்து, விலை குறைந்து வந்தநிலையில், செவ்வாய்க்கிழமை

ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது. கடந்த 6 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,344 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,363

1 பவுன் தங்கம்...............................34,904

1 கிராம் வெள்ளி.............................67.90

1 கிலோ வெள்ளி.............................67,900

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,391

1 பவுன் தங்கம்...............................35,128

1 கிராம் வெள்ளி............................. 68.80

1 கிலோ வெள்ளி.............................68,800.

முழு கட்டுரையைப் படிக்க →