சம்பவ இடத்தை பார்வையிடும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் 
தமிழ்நாடு

மீன்வளத்துறை அமைச்சர் சகோதரர் வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சகோதரர் வீட்டின் கதவை உடைத்து நகைகள், பணம் திருடிச் செல்லப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது. 

DIN


தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சகோதரர் வீட்டின் கதவை உடைத்து நகைகள், பணம் திருடிச் செல்லப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது. 

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சகோதரர் டாக்டர். சுதானந்தன். இவருக்கு தூத்துக்குடிகேடிசி நகரில் சொந்தமான வீடு உள்ளது. 

அந்த வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் முன்புற கதவை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள், பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.  

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கொள்ளையர்கள் திருடிச் சென்ற பணம் மற்றும் நகைகள் விவரம் முழுமையாக தெரியவில்லை என போலீஸார் தெரிவித்தனர். 

மேலும் சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.  ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடக்கம்

அமெரிக்க வரி விதிப்பு முழுமையாக அமலுக்கு வந்தால் ஜவுளி உள்ளிட்ட சில துறைகளில் பாதிப்பு ஏற்படும்: ஆா்பிஐ ஆளுநா் மல்ஹோத்ரா

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

புதிய வருமான வரி விதிகள்: டிசம்பருக்குள் அறிவிக்கை

சி.பி.ராதாகிருஷ்ணன் - சுதா்சன் ரெட்டி இடையே நேரடி போட்டி

SCROLL FOR NEXT