மேட்டூர் அணை. 
தமிழ்நாடு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 11,392  கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை 11,392 கன அடியாக அதிகரித்துள்ளது.

DIN

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை 11,392 கன அடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

இவ்விரு அணைகளிலிருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 7,491 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 11,392 கன அடியாக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 74.30 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 73.97அடியாக சரிந்துள்ளது.  

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்குக் கால்வாய்ப் பாசனத்துக்கு திறக்கப்படும் நீர் அளவு வினாடிக்கு 500 கனஅடியில் இருந்து 700 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 36.51 டி.எம்.சி. யாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT