முகப்பு
தமிழ்நாடு

அவிநாசியில் தன்னார்வ அமைப்பு சார்பில் கரோனா இலவச தடுப்பூசி முகாம்

அவிநாசி கோவிட் இணைந்த கைகள் அறக்கட்டளை சார்பில் ஆயிரம் பேருக்கு கரோனா இலவச தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

அவிநாசி: அவிநாசி கோவிட் இணைந்த கைகள் அறக்கட்டளை சார்பில் ஆயிரம் பேருக்கு கரோனா இலவச தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் அவிநாசி கோவிட் இணைந்த கைகள் அறக்கட்டளை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கரோனா தனிமைப்படுத்தல் மையம் தொடங்கப்பட்டு தன்னார்வலர்கள் பணியாற்றினர். இதைத்தொடர்ந்து, இலவசமாக மக்களுக்கு 1,000 தடுப்பூசிகள் செலுத்துவதற்கான அனுமதி பெற்று, முதற்கட்டமாக அவிநாசி அருகே வஞ்சிபாளையம் அரசுப்பள்ளியில் முகாம் நடைபெற்றது.

இம்முகாமை அவிநாசி ஒன்றியக் குழு உறுப்பினர் முத்துசாமி துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் குகப்பிரியா, வழக்குரைஞர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

கோவை சி.எஸ்.ஆர் கிளினிக் மருத்துவக் குழுவினர் மருத்துவ ஏற்பாடுகளை செய்திருந்தனர். நல்லது நண்பர்கள் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் சிவக்குமார், இராஜகோபால், லோகநாதன், இணைந்த கைகள் ஒருங்கிணைப்பாளர்கள் சந்தீப், சிவா, ரவிக்குமார் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர். இம்முகாமில் முதற்கட்டமாக 270 நபர்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →