தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்: 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும்

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

DIN

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில்  2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

இதில் பேசிய அவர், தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும் என்றும் தினசரி ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். 

மேலும், குக்கிராமங்களை மேம்படுத்த ரூ.1,200 கோடி செலவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும். 

கிராமப்புற வீட்டு வசதிக்கு 3548 கோடி வழங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கான மானியம் 2.76 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

2021-2022-ம் ஆண்டில் 8,017.41 கோடி ரூபாய் செலவில் 2,89,877 வீடுகள் கட்டித்தரப்படும். 

1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கப்படும்.

ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் போதைப்பொருள் விவகாரம்! தொடர்புடைய இந்தியர்கள் விசாவுக்கு தடை!

அந்த அரபிக்கடலோரம்... யார் அவர்?

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தான் பேட்டிங்; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுமா?

3 நிமிஷங்களுக்கு ரூ. 60 லட்சம்! புர்ஜ் கலீஃபாவில் பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து! யார் செலவு?

"திருடர்களைப் பாதுகாக்கும் தலைமை தேர்தல் ஆணையர்!" Rahul Gandhi-யின் பரபரப்புக் குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT