முகப்பு
தமிழ்நாடு

மதுரையில் மெட்ரோ; கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில்

கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை 2025 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை 2025 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில்  2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இதில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் குறித்து பேசிய அவர், 

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க விரிவான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தயார் செய்யப்படும். 

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் வழியாக வண்டலூர் அருகிலுள்ள கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் நீட்டிக்கப்படும். 

கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை 2025 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →