10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைக்க ரூ.6 கோடி 
தமிழ்நாடு

10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைக்க ரூ.6 கோடி

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் கூறியுள்ளார்.

DIN


சென்னை: தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் கூறியுள்ளார்.

உழவர் சந்தைகள் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், 
உழவர் சந்தையில் வெளி மார்க்கெட் விலை மற்றும் உழவர் சந்தை விலை அடங்கிய டிஜிட்டல் போர்டு வைக்கப்படும்.

காய்கறி கழிவுகளில் தயாரிக்கப்படும் உரம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும்.

ரூ.10 ஆயிரம் மானியம் 

மின்மோட்டார், பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

50 ஊழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து மேம்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு.

மேலும் பார்க்க.. வேளாண்மை நிதிநிலை அறிக்கையின் முழு விவரம்

உழவர் சந்தை கழிவுகளை உரமாக்கும் திட்டம் 25 உழவர் சந்தைகளில் ரூ.2.75 கோடியில் செயல்படுத்தப்படும்.

கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, வேலூர், திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT