திருக்குவளை: கருணாநிதி இல்லத்தில் முரசொலி மாறனின் பிறந்தநாள் விழா 
தமிழ்நாடு

திருக்குவளை: கருணாநிதி இல்லத்தில் முரசொலி மாறனின் பிறந்தநாள் விழா

முரசொலி மாறன் திருவுருவச் சிலைக்கு திமுக நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என். கௌதமன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

DIN

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 88-வது பிறந்த நாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் திருக்குவளையிலுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி இல்லத்தில், உள்ள முரசொலி மாறன் திருவுருவச் சிலைக்கு திமுக நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என். கௌதமன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக, அங்குள்ள கருணாநிதியின் தந்தை முத்துவேலர் மற்றும் தாயார் அஞ்சுகம், மு. கருணாநிதி உள்ளிட்டோரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ப. கோவிந்தராசன், க. ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கீழையூர் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், கீழ்வேளூர் (தெற்கு) கே. பழனியப்பன், தலைஞாயிறு மகா.குமார், வேதாரண்யம் (மேற்கு) சதாசிவம், நாகை (வடக்கு) ஆனந்த், வேளாங்கண்ணி பேரூர் கழக பொறுப்பாளர் சார்லஸ், திமுக நாகை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சோ.பா.மலர்வண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் மு.ப. ஞானசேகரன், இராம. இளம்பரிதி, திருக்குவளை ஊராட்சி மன்றத் தலைவரும் மாவட்ட பிரதிநிதியுமான இல.பழனியப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்றைய ராசி பலன்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவா் மீது நடவடிக்கை : கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: நலவாரியத் தலைவா் வழங்கினாா்

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT