தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ம் தேதி வரை நடைபெறவிருந்த நிலையில் செப்டர்மர் 13ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றன. தமிழக நிதிநிலை அறிக்கையை நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆக. 13-ம் தேதியும் வேளாண் துறை குறித்த நிதிநிலை அறிக்கை 14-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து ஆகஸ்ட் 16 முதல் 19 வரை நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் துறை குறித்த நிதிநிலை அறிக்கை மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்ற அலுவல் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடித்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.