முகப்பு
தமிழ்நாடு

தமிழிசையின் தாயார் மறைவு: தமிழக முதல்வர், ஆளுநர் நேரில் அஞ்சலி

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி அம்மாள் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்
பகிர்:

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி அம்மாள் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தெலங்கான ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) தமிழிசை சௌந்தரராஜனின் தாயாரும், முதுபெரும் இலக்கியவாதி குமரிஅனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி (78) அம்மாள், சென்னையில் புதன்கிழமை அதிகாலை இயற்கை எய்தினார்.

அஞ்சலி செலுத்திய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் கிருஷ்ணகுமாரி அம்மாள் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் உடன் இருந்தனர். 

கிருஷ்ணகுமாரி அம்மாள் மறைவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →