மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.09 அடியாகச் சரிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 69 அடியிலிருந்து 68.09 அடியாகச் சரிந்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:26 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 69 அடியிலிருந்து 68.09 அடியாகச் சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4379 கன அடியிலிருந்து 4023 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 31.08 டி.எம்.சி.யாக உள்ளது.
Advertisement
ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 6,000 கன அடியாக உள்ளது.