தமிழ்நாடு

தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுமா? நிதியமைச்சர் விளக்கம்

DIN

தமிழகத்தில் சமையல் எரிவாயு உருளையின் விலை குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை பதிலளித்துள்ளார்.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுமா என பாமகவின் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.

அவரின் கேள்விக்கு பதிலளித்து நிதியமைச்சர் பேசியது:

சமையல் எரிவாயு விலை உயர்வால் தமிழக அரசுக்கு ஒரு ரூபாய் கூட கிடைப்பதில்லை. மேலும், விலை குறைப்பிற்கான வரிவிதிப்பு அதிகாரமும், வருமானமும் தமிழக அரசிடம் இல்லை என்றார்.

நேற்று ஒரே நாளில் சமையர் எரிவாயு விலை ரூ. 25 உயர்த்தப்பட்டதையடுத்து ரூ.875.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் மூலம், கடந்த 8 மாதங்களில் எரிவாயு உருளையின் விலை ரூ.165 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT