தமிழ்நாடு

மணப்பாறை அருகே ஊரக வேலை உறுதித்திட்டப் பணியாளர்கள் போராட்டம்

DIN

மணப்பாறை அடுத்த நடுகாட்டுப்பட்டி, வெள்ளை பூலாம்பட்டி, ஆண்டியக்கவுண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் முறையான வேலை தரவில்லை எனக்கூறி 100 நாள் வேலை பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வேங்கைகுறிச்சி பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் நடுகாட்டுப்பட்டி, வெள்ளை பூலாம்பட்டி, ஆண்டியக்கவுண்டம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பணியாளர்களுக்கு நிகழாண்டு தொடங்கி 5 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில் அதிகபட்சமாக ஒரு நபருக்கு 10 நாள்கள் மட்டுமே வேலை அளித்திருப்பதாகக் கூறும் பணியாளர்கள், வேலை தருவதில் பாகுபாடு பார்ப்பதாகவும் புகார் கூறுகின்றனர். 

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினரிடம் முறையிட்டும், ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என ஆத்திரமடைந்த பணியாளர்கள், காலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பேசிய சமரச பேச்சுவார்த்தையை ஏற்காத பணியாளர்கள் வட்டார வளரச்சி அலுவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
பின் அங்கு வந்தடைந்த ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி, பணிகளை பிரித்து வழங்கும் முறை ஆன்லைன்னில் வந்துள்ளதாக அதில் கைப்பேசி மென்பொருளை கையாளுவத்தில் ஏற்றப்பட்ட சிக்கலினால் பணிகள் வழங்குவதில் தவறு ஏற்பட்டதாகவும், இன்று அனைவருக்குமே பணி செய்ததாக பதிவு செய்துக்கொள்ளப்படும் என்றும், நாளை முதல் அனைத்து பகுதிகளுக்கும் வேலை பிரித்து முறையாக வழங்கப்படும் என்றும் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT