தமிழ்நாடு

'7.5% இட ஒதுக்கீடு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும்' 

DIN


7.5% இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கோரிக்கை மனுவில், 

மருத்துவ, பொறியியல் தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் உதவி பெறும் மாணவர்களுக்கு வாய்ப்பளித்து சம நீதி வழங்கிட வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழி இணை பிரிவினை இடையூறின்றி செயல்படுத்திட வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும்.

நிறுத்திவைக்கப்பட்டுள்ள உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் மற்றும் அகவிலைப்படி உயர்வுகள் விரைவாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முன்வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT