தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி இரண்டாவது தவணை போடாதவர்கள் கவனத்துக்கு..

DIN


தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், சிறப்பு முகாம்கள் மூலமும் பல இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை மாநகராட்சியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 16.01.2021 மற்றும் 10.07.2021 க்கு இடையில் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 5,64,048 கோவாக்சின் மற்றும் 10,48,575 கோவிஷூல்டு பயனாளிகள் இப்போது தடுப்பூசிகளின் 2வது தவணை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், முதல் தவணை செலுத்திக் கொண்டவர்களில், இரண்டாவது தவணை செலுத்தாமல் இருக்கும் பயனாளிகளின் எண்ணிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா முதல் தவணை செலுத்திக் கொண்டவர்களில், பலருக்கும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவதில் இன்னமும் ஒருவித தயக்கம் நிலவுகிறது. எனவே, அதனை விடுத்து, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதோ, முதல் தவணை செலுத்தி, இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ளாதவர்களின் புள்ளி விவரம் மாவட்ட வாரியாக..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT