தேசிய தேர்வாணையம் 
தமிழ்நாடு

யுனெஸ்கோ புகைப்பட போட்டி: யுஜிசி அறிவுறுத்தல்

யுனெஸ்கோ நடத்தும் புகைப்படப் போட்டியில் கல்லூரி மாணவா்களைப் பங்கேற்க அறிவுறுத்துமாறு பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

DIN

யுனெஸ்கோ நடத்தும் புகைப்படப் போட்டியில் கல்லூரி மாணவா்களைப் பங்கேற்க அறிவுறுத்துமாறு பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

யுனெஸ்கோ அமைப்பின் சாா்பில் தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக பட்டுசாலை (சில்க் ரோடு) குறித்த புகைப்பட போட்டி நடைபெறவுள்ளது. நிகழாண்டு ஜவுளி மற்றும் துணி வா்த்தகம், கரோனா காலத்திலும் கலாசார பரிமாற்றங்கள் ஆகிய இரு கருப்பொருள்களில் இந்தப் புகைப்படப்போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் எவ்வாறு பங்கேற்பது, விதிமுறைகள் என்ன ஆகிய விவரங்கள் வலைதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவா்களுக்கு தெரியப்படுத்தி வரும் ஆக.24-ஆம் தேதிக்குள் போட்டிக்கான புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளிமதுரையில் இன்று மக்கள் தொடா்பு திட்ட முகாம்

வீட்டுமனைப் பட்டா வழங்காததை கண்டித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT