முகப்பு
குளு குளு காலநிலை மாற்றத்தால் வெயில் முகம் தெரியாமல்  ரம்மியமான சூழலில் மானாமதுரை பகுதி.
தமிழ்நாடு

காலநிலை மாற்றத்தால் குளுகுளு குற்றாலமாக மாறிய மானாமதுரை, திருப்புவனம் பகுதிகள்!

காலநிலை மாற்றத்தால்  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை குளுகுளு குற்றாலமாக மாறிய ரம்மியமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
குளு குளு காலநிலை மாற்றத்தால் வெயில் முகம் தெரியாமல்  ரம்மியமான சூழலில் மானாமதுரை பகுதி.
பகிர்:

மானாமதுரை: காலநிலை மாற்றத்தால்  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை குளுகுளு குற்றாலமாக மாறிய ரம்மியமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதனால் வீடுகளில் மக்கள் புழுக்கம் தாங்காமல் அவதிப்பட்டு வந்தனர். அவ்வப்போது காற்று வீசி வந்தாலும் புழுக்க நிலை தொடர்ந்தது. 

இந்நிலையில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாள்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
 
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் வானத்தை மழை மேகங்கள் சூழ்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. ஆங்காங்கு பன்னீர் தூவுது போல் சாரல் மழை தூறியவாறு இதமான தென்றல் காற்று வீசியதுடன் வெயில் முகம் தெரியாமல் குளுகுளு குற்றாலம் போல் குளிர்ந்த காலநிலை நிலவியது. 

இந்த ரம்மியமான சூழல் வெயில் கொடுமையை அனுபவித்து வந்த இப்பகுதி மக்களுக்கு இதமாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →