தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்டொ்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22-ல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது நடந்த வன்முறையின் காரணமாக பொது மக்களுக்கு உயிரிழப்பு, காயங்கள் ஏற்பட்டன.  
மேலும், பொது மற்றும் தனியாா் சொத்துகளுக்கும் சேதங்கள் உருவாகின. அவை குறித்து விசாரிப்பதற்காக, சென்னை உயா் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டாா். 
கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில், தனது இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன், அண்மையில் முதல்வரிடம் தாக்கல் செய்தாா். 
இதனிடையே ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை இன்று நடக்கவுள்ள நிலையில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT