முகப்பு
தமிழ்நாடு

மானாமதுரையில் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டிருந்த இளைஞர் கார் மோதி பலி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நான்கு வழிச்சாலையில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டிருந்த இளைஞர் கார் மோதி  உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
மானாமதுரை அருகே ஓட்டப் பயிற்சி மேற்கொண்டிருந்த போது கார் மோதி உயிரிழந்த இளைஞர் விக்னேஸ்வரன்
பகிர்:

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நான்கு வழிச்சாலையில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டிருந்த இளைஞர் கார் மோதி  உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. 

மானாமதுரை அருகே உடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் விக்னேஸ்வரன் (20), இவர் இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக தனது உடலை தயார்படுத்தி வந்தாராம்.

மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் விக்னேஸ்வரன் அதிகாலைப் பொழுதில் ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டிருந்தார். ராஜகம்பீரம் என்ற இடத்தில் இவர் ஓடிக் கொண்டிருந்தபோது  அந்த வழியாக வேகமாகச் சென்ற அடையாளம் தெரியாத கார் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்துச் சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மானாமதுரை நகர் காவல்துறையினர் விபத்துச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய கார் மற்றும் அதன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →