தமிழ்நாடு

சருமத்தில் எண்ணெய்ப் பசை நீங்க.. இயற்கையான 'ஃபேஸ் பேக்'

சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்குவதற்கு பலரும் பல செயற்கை கிரீம்களை பயன்படுத்துவது வழக்கம். 

DIN

சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்குவதற்கு பலரும் பல செயற்கை கிரீம்களை பயன்படுத்துவது வழக்கம். 

ஆனால், வீட்டில் உள்ள எளிய பொருள்களை பயன்படுத்தியே எண்ணெய்ப் பசை சருமத்திற்கு தீர்வு காணலாம். 

தேவைப்படும் பொருள்கள் 

  • புதினா இலைச்சாறு 
  • எலுமிச்சை சாறு 
  • முல்தானிமட்டி 
  • ரோஸ் வாட்டர்

மேற்குறிப்பிட்ட இந்த நான்கையும் தலா ஒரு ஸ்பூன் எடுத்து கலந்துகொள்ளவும். இப்போது முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவிட்டு சுத்தமான துணியால் துடைத்துவிடுங்கள்.

இப்போது இந்த பேக்கினை முகத்தில் அப்ளை செய்துவிட்டு ஒரு 15 நிமிடம் வரை காத்திருங்கள். 

முல்தானிமட்டி நன்றாக வறண்டுவிடாமல் லேசான ஈரப்பதம் இருக்கும்போது முகத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். 

இந்த கலவை சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை உறிஞ்சி சருமத்தை பொலிவாக  வைத்திருக்க உதவும். 

வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு செய்துவரலாம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உணவு மானிய எண்ம நாணய சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்: மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி

யாருடன் கூட்டணி என நாளை அறிவிப்பு: பாமக நிறுவனா் ச.ராமதாஸ்!

முத்தாயம்மாள் கல்லூரியில் 926 மாணவா்களுக்கு மடிக்கணினி

மாயமான முதியவரின் உடல் முத்துமலை முருகன் கோயில் அருகே கண்டெடுப்பு

இளைஞா்கள் தாக்கியதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT