தமிழ்நாடு

தமிழகத்தில் மத அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டாம்: ஹிந்து முன்னேற்றக் கழகம்

DIN

சிதம்பரம்: தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டாம் என ஹிந்து முன்னேற்றக்கழக மாநில தலைவர் வழக்குரைஞர் கோபிநாத் தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய செவ்வாய்க்கிழமை வருகை தந்த  ஹிந்து முன்னேற்றக்கழக மாநில தலைவர் வழக்குரைஞர் கோபிநாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகஅரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என அறிவித்திருப்பது மிகவும் தவறு. அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி உள்ளிட்ட எந்த தலைவர்களுமே இந்துத்துவாவின் ஆகம விதிகளில் தலையிட்டதில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சொல்லி ஆகம விதிகளில் தேவையில்லாமல் தலையிடுகிறார்.

ஹிந்து முன்னேற்றக்கழகம் சார்பாக தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால் ஏற்கனவே தில்லைநடராஜர் கோயில் கைவைத்து என்ன நடந்தது என்றும், கோயிலை தீட்சிதர்களே நடத்தலாம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது என்றும் தெரியும்.

எனவே மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்ய வேண்டாம். இந்துக்கள் மிரண்டால் நாடு கொள்ளாது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தையும் முதலில் தூய்மைபடுத்துங்கள் குடமுழுக்கு செய்யுங்கள். அதனைவிட்டு நிலங்களை மீட்க வேண்டும் என்று மாயையை ஏற்படுத்தி இந்து மக்களை ஏமாற்ற வேண்டாம்.

ஹிந்துக்கள் கோயில்களை சொத்துகளை அறநிலையத்துறை கண்காணித்து வழிநடத்துகிறதோ. அதே போல் இஸ்லாமிய ஜமாத், கிருஸ்துவ சபைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். இல்லையென்றால் ஹிந்து கோயில்கள் அனைத்தையும் ஹிந்துக்களிடையே ஒப்படைக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது இந்துக்களுக்கு ஆதரவான ஆட்சி இல்லை என கோபிநாத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

போடி அருகே வனப் பகுதியில் காட்டுத் தீ

அருளால் இறைவனை அறிய வேண்டும்: சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா

மேகாலயாவில் ரோல்பால் போட்டி தமிழக அணி வீரா்களுக்கு வழியனுப்பு விழா

சாலை விபத்தில் மதுரை திமுக நிா்வாகி பலி

SCROLL FOR NEXT