முகப்பு
தமிழ்நாடு

வங்கக் கடலில் நிலநடுக்கம்: சென்னையில் நில அதிர்வு

சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கத்தால் சென்னையின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
வங்கக் கடலில் நிலநடுக்கம்: சென்னையில் நில அதிர்வு
பகிர்:

சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கத்தால் சென்னையின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காக்கிநாடாவிலிருந்து 296 கி.மீ. கிழக்கு திசையில், சென்னைக்கு சுமார் 322 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

வங்கக் கடலின் சில பகுதிகளில் சரியாக பகல் 12.25 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சென்னையில் அடையாறு, பெசன்ட்நகர், திருவான்மியூர் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →