சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 128 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.35,752-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.35,752-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதன்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.16 குறைந்து, ரூ.4,469க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.128 குறைந்து, ரூ.35,752-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில் வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து, ரூ.67.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.67,900 ஆகவும் உள்ளது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,469
1 பவுன் தங்கம்...............................35,752
1 கிராம் வெள்ளி............................. 67.90
1 கிலோ வெள்ளி.............................67,900.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,485
1 பவுன் தங்கம்...............................35,880
1 கிராம் வெள்ளி.............................67.70
1 கிலோ வெள்ளி.............................67,700