கே.டி.ராகவன் விடியோ வெளியிட்ட யூடியூப் சேனல் நீக்கம் 
தமிழ்நாடு

கே.டி. ராகவனின் சர்ச்சை விடியோ வெளியிட்ட யூடியூப் சேனல் நீக்கம்

பாஜக நிர்வாகி கே.டி.ராகவனின் சர்ச்சை விடியோவை வெளியிட்ட யூடியூப் சேனல் புதன்கிழமை நீக்கப்பட்டுள்ளது.

DIN

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகப் பொதுச்செயலராக இருந்த கே.டி. ராகவன் தொடர்பான சர்ச்சைக்குரிய பாலியல் விடியோவை வெளியிட்ட யூடியூப் சேனல்  புதன்கிழமை நீக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் சமீபத்தில் இணைந்த இந்தப் பத்திரிகையாளரின் யூடியூப் சேனலில்,  பெண்கள் தொடர்பான கே.டி. ராகவனின் சர்ச்சைக்குரிய காணொலியை நேற்று காலை வெளியிடப்பட்டது.

இந்த காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதையடுத்து தனது கட்சிப் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்த கே.டி. ராகவன், தன் மீதான குற்றச்சாட்டையும் மறுத்திருந்தார்.

மேலும், தன்னிடம் பாஜகவைச் சேர்ந்த மேலும் 15 தலைவர்களின் காணொலிகள் ஆதாரங்களுடன் இருப்பதாகவும், அவற்றை விரைவில் ஒவ்வொன்றாக வெளியிடுவோம் என்றும் அந்த சர்ச்சைக்குரிய காணொலியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்த காணொலியை பதிவேற்றிய சேனலை யூடியூப் நிர்வாகம் நீக்கியுள்ளது. எனினும், வெவ்வேறு தளங்களில் இந்தக் காணொலியின் பிரதிகள் வலம்வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT