தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

DIN

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. ஆவணி திருவிழாவில் பக்தர்கள் அதிகளவில் கூட வாய்ப்புகள் உள்ளதால், கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 
ஆவணி திருவிழா ஆகம விதிப்படி பக்தர்கள் இன்றி நடைபெறும். ஆவணி திருவிழா நிகழ்வுகளை வீட்டில் இருந்து தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் வாயிலாக பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது " என்று தெரிவித்துள்ளார். இதனால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT