கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டி மேட்டு தெருவில் உள்ள தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.    
தமிழ்நாடு

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து

கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டி மேட்டு தெருவில் உள்ள தீப்பெட்டி ஆலையில்  சனிக்கிழமை காலை திடீா் தீ விபத்து நேரிட்டது.

DIN

கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டி மேட்டு தெருவில் உள்ள தீப்பெட்டி ஆலையில்  சனிக்கிழமை காலை திடீா் தீ விபத்து நேரிட்டது.

தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு போராடி தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டி மேட்டு தெருவில் ராஜ் மகன் வெங்கடேஷ் என்பவர் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். 

இந்நிலையில், சனிக்கிழமை காலை தொழிலாளி ஞானம் தீப்பெட்டி ஆலையை திறந்து வழக்கம்போல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டு அந்தப் பகுதி கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. 

தகவலறிந்து அங்குவந்த கோவில்பட்டி தீயணைப்பு படை அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகே, அமுதே... அஞ்சலி நாயர்!

சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு: தாக்குதல் நடத்த சதி! -என்ஐஏ விசாரணை

நாட்டின் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் ரூ.40,000: இம்மாதம் வெளியாகிறது

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

மலையாள சினிமாவின் புதிய முகம் Lokah! Universe-ன் துவக்கமும், எதிர்கால திட்டங்களும்!

SCROLL FOR NEXT