தமிழ்நாடு

மேம்பால விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

DIN

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேம்பால விபத்து ஏற்பட்டததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் நத்தம் சாலையில் புதிதாகப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த 2 பேர் படுகாயமடைந்தனர். இதில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் (வயது 45) என்ற தொழிலாளி உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனிடையே மேம்பால விபத்து நிகழ்ந்த இடத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார்.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மேம்பால விபத்து ஏற்பட்டுள்ளது. 

உரிய பயற்சி அளிக்கப்படாமல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. பணியில் பயன்படுத்திய இயந்திரங்களை முறையாக ஆய்வு செய்யாமல் இருந்ததும் ஆய்வில் தெரிய வந்தள்ளது. 

பாலம்கட்டும் ஒப்பந்ததாரரிடம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்படும். மேம்பாலப் பணியை தொடர்ந்து மேற்கொள்வது குறித்து ஆட்சியர் முடிவு செய்வார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT