தமிழ்நாடு

தமிழகத்தில் 150 கிராமங்களில் முழுமையாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தில் 150 கிராமங்களில் முழுமையாக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அரசு நலத்திட்டங்கள் வழங்குதல் மற்றும் அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ஆதரவற்றோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான தமிழக அரசின் நிதி உதவித்திட்டங்களை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை தடுப்பூசிகள் போடுவதில் ஒவ்வொரு தரப்பினர் என்கிற வகையில் முகாம்கள் நடத்தி, யாருக்கெல்லாம் பாதிப்புகள் ஏற்படுகிறதோ
அவர்களுக்கெல்லாம் தனித்தனி முகாம்கள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கட்டடத் தொழிலாளர்கள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முதல்வரே பங்கேற்று தடுப்பூசி செலுத்தும் முகாமினைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பயிற்சி வழக்கறிஞர்கள் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி பலத்தரப்பினருக்கும் தடுப்பூசிகள் போடப்படுகின்ற சூழலில் 150 கிராமங்களில் முழுமையாக தடுப்பூசிகள் போடப்பட்ட கிராமங்களாக மாறியிருக்கிறது.
குறிப்பாக கொடைக்கானல் நகராட்சி 100 சதவிகிதம் தடுப்பூசிகள் போடப்பட்ட நகராட்சியாக மாறியிருக்கிறது. 
பழனி நகராட்சி நாளையோ அல்லது அதற்கு மறுநாளோ 100 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்ட நகராட்சியாக மாற இருக்கிறது. தமிழகத்தில் சுற்றுலாத்தளமாக கருதப்படுகிற திருவண்ணாமலை, இராமேஷ்வரம், வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய மாவட்டங்கள் 100 சதவிகிதம் தடுப்பூசிகள் என்கிற இலக்கை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. விரைந்து அதற்கான அறிவிப்புகள் வரவிருக்கிறது. 
இந்தியாவிலேயே தமிழகத்தில் குறைவான மக்கள் தொகை கொண்ட உதகை மற்றும் மற்றொரு மாவட்டமும் சேர்ந்து 100 சதவிகிதம் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ட மாவட்டமாக அறிவிக்கப்படவிருக்கிறது என்றார். இந்நிகழ்வில் சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர் விஜயாராணி இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகோபாலன் உள்ளிட்ட அரசு உயரலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT