தமிழ்நாடு

ஆயக்காரன்புலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 112 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு இன்று (ஆக.29) தேர்வு செய்யப்பட்டனர். 

ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு நிலைப்பள்ளியில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமுக்கு பள்ளியின் தலைமையாசிரியரும், அரிமா சங்கத் தலைவருமான கா.பழநியப்பன் தலைமை வகித்தார்.

மன்னார்குடி ஏ.லெட்சுமணத் தேவர் நினைவாக புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, அரிமா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட முகாமை அரிமா சங்க மாவட்டத் தலைவர் எல்.என். இளங்கோவன் தொடங்கி வைத்தார்.

அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் ஏ.வி.எஸ்.சம்பத், விஜயகுமார், பார்த்தசாரதி, செந்தில்குமார், ஊராட்சித் தலைவர் இராமையன், வட்டாரக் கல்வி அலுவலர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முகாமில் 458 பேர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டதில், கண் அறுவை சிகிச்சை செய்ய 112 பேர் தேர்வு செய்யப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT