முகப்பு
தமிழ்நாடு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

வட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதியில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும். 

சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, செங்கல்பட்டு மாவட்டம் சத்தியபாமா பல்கலைக்கழகம் மற்றும் நீலகிரி அவலாஞ்சியில் தலா 9 செமீ மழை பெய்துள்ளது. 

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →