முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா பல்கலை. விவகாரம்: சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கைது

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பகிர்:

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மெரினா - வாலஜா சாலையில் அமர்ந்த பேரவை உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →