முகப்பு
தமிழ்நாடு

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஜெயலலிதா பல்கலை. இணைப்பு: ஓபிஎஸ்

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
ஓ.பன்னீர்செல்வம்(கோப்புப்படம்)
பகிர்:

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியது:

“அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை நீக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் இருக்கக்கூடாது என தமிழக அரசு நினைக்கிறது.

கல்வித்துறையில் எந்த மாநிலமும் செய்ய முடியாததை ஜெயலலிதா செய்து காட்டியவர். மாநில வருவாயில் நான்கில் ஒரு பங்கை கல்வித்துறைக்காக ஒதுக்கியவர் ஜெயலலிதா.”

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →