தமிழ்நாடு

திருமணத்திற்கு பெற்றோர் மறுப்பு: குமுளியில் காதல் ஜோடி விஷம் குடித்துத் தற்கொலை

DIN

கம்பம்: பெற்றோர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் குமுளியில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தேனி மாவட்டம் அருகே உள்ள குமுளியில் தனியார் தங்கும் விடுதியில், நீண்ட நேரமாக கதவை திறக்காததால் கதவை திறந்து பார்த்ததால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுபற்றி விடுதி உரிமையாளர் குமுளி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

 புகாரின் பேரில் காவல் துறையினர் உடலைக்கைப்பற்றி கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்தனர்.

விசாரணையில் இறந்த காதல் ஜோடியினர்,  குமுளியைச்சேர்ந்த தினேஷ் (24), பெயிண்டராக வேலைபார்த்ததும், புற்றடியைச் சேர்ந்த அபிராமி (20), எட்டாம் மைலில் உள்ள தனியார் ஆய்வகத்தில் உதவியாளராக வேலை செய்ததும் தெரியவந்தது.

 இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து திருமணம் செய்ய பெற்றோரிடம் சம்மதம் கேட்டுள்ளனர்.

 பெற்றோர் மறுப்பு தெரிவிக்கவே திங்கள் கிழமை குமுளி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

 பின்னர் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

 நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகப்பட்ட விடுதி ஊழியர்கள் கதவை திறந்து பார்த்த போது இருவரும் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. குமுளி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT