தமிழ்நாடு

போரூர் ஏரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

DIN

சென்னை போரூர் ஏரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. தலைநகர் சென்னையிலும் தொடர் கனமழை பெய்து வந்ததால் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கின. 

எனினும் தமிழக அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையில் வெள்ளம் வடிந்தாலும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகின்றன. 

அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை போரூர் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். போரூர் ஏரியின் நீர் இருப்பு, அதன் உறுதித் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அப்பகுதியில் மக்களுக்கு நிவாரணப் பொருள்களையும் வழங்கினார். 

ஐயப்பந்தாங்கல், மவுலிவாக்கத்தில் பாதிப்புகளையும் முதல்வர் பார்வையிடுகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT