முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 703 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 703 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 11 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 703 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் 11 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று 710 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 703 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன்கிழமை (டிச.8) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதிதாக 1,01,766 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 703 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,32,648-ஆக அதிகரித்துள்ளது.

ஒருநாளில் மட்டும் 11 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,560-ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவிலிருந்து 728பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை  26,88,142-ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு

சென்னையில் புதிதாக 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கோவையில் 177 பேரும்,  செங்கல்பட்டில் 56 பேரும், ஈரோட்டில் 58 பேரும், திருப்பூரில் 50 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.