ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை 
தமிழ்நாடு

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், மேட்டுப்பாளையம் -குன்னூர் சாலை ராணுவத்தின் வசம் சென்றுள்ளது.

DIN

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை ராணுவத்தின் வசம் சென்றுள்ளது.

சூலூரிலிருந்து இன்று காலை குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

இந்நிலையில், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் சென்ற போது விபத்துக்குள்ளானது. இதில் தற்போது வரை 10 பேர் பலியாகியிருக்கிறார்கள்.4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் , விபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி நிலை குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

கருப்புப் பெட்டியைத் தேடும் ராணுவத்தினர்:

ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியின் பதிவுகளை வைத்தே விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்பதால் கருப்புப்பெட்டியை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை ராணுவத்தின் வசம் சென்றுள்ளது. அந்த சாலையில் எல்லா போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என். ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர் மீது வழக்கு

கரூர் பலி: இழப்பீடாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் - திருமாவளவன்

கரூர் கூட்ட நெரிசல் பலி: இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து

கரூர் கூட்ட நெரிசல் பலி: திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!

கரூர் கூட்ட நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து இபிஎஸ் ஆறுதல்!

SCROLL FOR NEXT