முகப்பு
தமிழ்நாடு

ஹெலிகாப்டர் விபத்து: குன்னூர் விரைகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு குன்னூர் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 8 டிசம்பர், 2021 at 3:17 PM
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு
பகிர்:

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு குன்னூர் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூலூரிலிருந்து இன்று காலை விளிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

இந்நிலையில், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் சென்ற போது விபத்துக்குள்ளானது. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விபின் ராவத்தின் நிலை என்ன என்று தகவல் தெரியாத நிலையில் தில்லியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.

மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு குன்னூர் வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று குன்னூர் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.