முகப்பு
தமிழ்நாடு

திடீர் மாற்றத்துக்கு காரணம்? தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகமானோர் ஆர்வம்

கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது அதிகமானோர் தாங்களாக முன் வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவதாக கிராம ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் கூறுகிறார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
திடீர் மாற்றத்துக்கு காரணம்? தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகமானோர் ஆர்வம்
பகிர்:

கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது அதிகமானோர் தாங்களாக முன் வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவதாக கிராம ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் கூறுகிறார்கள்.

ஒமைக்ரான் எனப்படும் புதிய வகை வைரஸ் நாட்டுக்குள் பரவி வருவதா அல்லது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பொதுவிடங்களில் அனுமதி மறுப்பா எதுதான் இதற்குக் காரணம் என்று இன்னமும் கண்டறியப்படவில்லை.

ஆரம்பத்தில், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவே பலரும் மறுத்தனர். வீடு வீடாகச் சென்று விசாரித்த போதும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள பலரும் முன்வரவில்லை. ஆனால், தற்போது, பலரும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெரும்பாலானோர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தற்போது, தடுப்பூசி போட வரும் சிலர், பூஸ்டர் ஊசி எப்போது போடப்படும் என்று கேட்கிறார்கள் என்கறிர் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்.

கரோனா தடுப்பூசி, எவ்வாறு செயல்படுகிறது என்பதை, கிராம மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து எடுத்துச் சொல்லி வந்தோம். தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளின் பலனாக, தற்போது மக்களிடையே கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்கறிர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர்.

தற்போது பரவி வரும் ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக பயன்பாட்டிலிருக்கும் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு பயன்படும் என்பது குறித்துத் தெரியவராவிட்டாலும் கூட, கரோனா பாதிப்பு தீவிரமடைதல் மற்றும் பலி எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்பது உண்மை. அதே வேளையில், இரண்டாம் தவணை செலுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்கிறார் ஐசிஎம்ஆர் உதவி இயக்குநர் மருத்துவர் பிரப்தீப் கௌர்.

கரோனா பேரிடருக்கு எதிரான போரில் தடுப்பூசிகள் வெகுச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

பொதுவாகவே, வைரஸ்கள் உருமாற்றம் அடைந்துகொண்டேதான் இருக்கும். அதுதான் அதன் பண்பு. ஆனால், அதன் அடிப்படை வடிவமைப்பு மாறாது. அப்படியேதான் இருக்கும். எனவே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், கரோனா பாதித்தாலும் உடல்நிலை மோசமடையாமலும், உயிர்பலி ஏற்படாமலும் தவிர்க்க முடியும் என்கிறார் பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் கே. குழந்தைசாமி.

கரோனா இரண்டாம் அலையின் இறுதிக்காலத்தில், கரோனாவுக்கு பலியானவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள்தான். அடுத்த அலையின்போது, கரோனா பாதிப்பு குறைவாகவே இருக்கும், ஆனால், அதிகமானோர் உயிரிழக்கும் அபாயமிருக்கிறது, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாக இருப்பர் என்றும் கூறுகிறார்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ஒமைக்ரான் பரவல் மற்றும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொதுவிடங்களுக்கு வரக் கூடாது என்ற கட்டுப்பாடும் மக்களிடையே கரோனா தடுப்பூசியின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கக் காரணங்களாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகமும் மெல்ல எழத்தான் செய்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →