தமிழ்நாடு

ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

DIN

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது காட்டேரி மலைப் பகுதி அருகே ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.

ஆனால், ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கிடைக்காததால் குன்னூர் பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நேற்று மாலை 3 மணிமுதல் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி உள்ளிட்ட 3 பொருள்கள் நஞ்சப்பசத்திரம் என்ற பகுதியில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கருப்புப் பெட்டியில் பதிவாகியுள்ள ஹெலிகாப்டரை ஓட்டிய விமானிகளின் உரையாடல் உள்ளிட்டவை ஆராய்ந்த பிறகே விபத்து குறித்த முழுமையான காராணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ கட்டுபாட்டில் வைக்கப்பட்டுள்ள கருப்புப் பெட்டியை பெங்களூரு அல்லது தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT