முகப்பு
தமிழ்நாடு

ஹெலிகாப்டர் விபத்து: விமானப் படை தளபதி, தமிழக டிஜிபி ஆய்வு

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமானப் படை தளபதி வி.ஆர்.செளத்ரி, தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமானப் படை தளபதி வி.ஆர்.செளத்ரி, தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் பாகங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்ட நிலையில் விபத்து நடந்த காட்டேரி மலைப் பகுதியில் விமானப்படை தளபதி மற்றும் தமிழக டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து அருகிலிருக்கும் குடியிருப்புகளின் வசிக்கும் மக்கள் மற்றும் விபத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →