ஆம்பூர் அருகே மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பாரதிய ஜனதா கட்சியினர் புதன்கிழமை முற்றுகையிட்டு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணம் பெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சி.வாசுதேவன் தலைமையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 44 ஊராட்சிகளில் ரூ10,000ஆயிரம் முதல் ரூ.20,000ஆயிரம் வரை பணம் பெற்று வீடு ஒதுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.