தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயில் 
தமிழ்நாடு

கள்ளர்வெட்டு திருவிழா: பக்தர்களுக்கு அனுமதியில்லை

கள்ளர்வெட்டு திருவிழாவின் முக்கிய நாள்களான நாளை, நாளை மறுநாள் இரு நாள்களுக்கு மட்டும் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வருவதற்கு அனுமதியில்லை.

DIN


திருச்செந்தூர்: தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கள்ளர்வெட்டு திருவிழாவின் முக்கிய நாள்களான நாளை, நாளை மறுநாள் (டிச.16,17) ஆகிய இரு நாள்களுக்கு மட்டும் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வருவதற்கு அனுமதியில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குதிரைமொழி கிராமம், தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கள்ளர்வெட்டு திருவிழா கடந்த 17.11.2021 அன்று தொடங்கி வருகிற 17.12.2021 அன்றுடன் நிறைவடைகிறது. 

தற்போது தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டும், பரவி வரும் உருமாறிய கொரோனா (ஒமைக்ரான்) வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் பொதுமக்கள் நலன் கருதியும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 31.12.2021 அன்று வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதனால் திருவிழாவின் முக்கிய நாள்களான 16.12.2021 (வியாழக்கிழமை) மற்றும் 17.12.2021 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாள்களுக்கு மட்டும் பக்தர்கள் யாரும் அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவிலுக்கு வருவதற்கு அனுமதி இல்லை என திருக்கோவில் நிர்வாகம் சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

திருவிழாவை காண 16.12.2021 மற்றும் 17.12.2021 ஆகிய இரு தினங்கள் பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT