தமிழ்நாடு

4,848 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

கிராம சுகாதார சேவையை மேம்படுத்த புதியதாக 4,848 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளனர். 
சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: கிராம சுகாதார சேவையை மேம்படுத்த புதியதாக 4,848 செவிலியர்கள் மற்றும் 2,448 சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நலவாழ்வு மையங்களில் தற்காலிக அடிப்படையில் செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் செவிலியருக்கு மாத ஊதியும் ரூ14,000/- மும், சுகாதார ஆய்வாளருக்கு ரூ.11,000/- மும் வழங்கப்பட உள்ளது.
கரோனா நோய்த்தொற்றில் பணியாற்றியவர்களுக்கும், உள்ளூரில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் பணிவழங்க வழிகாட்டுதல்கள் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநில அளவில், சமூக நீதியை காக்கும் வகையில் பணிநியமனங்கள் செய்வதில் அவரவர்க்குரிய இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படும் 69 சதவிகித இடஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடித்து நலவாழ்வு மையங்களில் சுகாதார ஆய்வாளர்கள் 2,448 பேரும், இடைநிலை சுகாதார பணியாளர்கள் 4,848 பேரும் ஆக மொத்தம் 7,296 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT