திருத்தங்கள் காவல் நிலையம் முன்பு திரண்ட அதிமுகவினர். 
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உறவினர்களிடம் போலீசார் விசாரணை 

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களிடம் திருத்தங்கள் போலீசார் விசாரணை நடத்தினர்.

DIN

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களிடம் திருத்தங்கள் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கு தொடர்புடைய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரர்களான விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் ரமணன்(34), வசந்தகுமார்(38), கார் ஓட்டுநர் ராஜ்குமார்(47) ஆகிய மூவரையும் திருத்தங்கள் போலீசார் விசாரணைக்கு வருமாறு வெள்ளிக்கிழமை இரவு சுமார் எட்டு மணியில் கைபேசியில் அழைத்தனர்.


இதை அடுத்து அவர்கள் அனைவரும் திருத்தங்கள் காவல் நிலையத்திற்கு சென்றனர். காவல் நிலையத்தில் இருந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் மூவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் திருத்தங்கள் காவல் நிலைய ஆய்வாளர் முத்துப்பாண்டி சார்பு ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மூவரிடமும் கே.டி. ராஜேந்திர பாலாஜி இருக்குமிடம் உள்ளிட்டவை குறித்து விசாரணையை மேற்கொண்டார்.

இந்நிலையில், தகவலறிந்து அதிமுகவினர் சுமார் 80 பேர் திருத்தங்கள் காவல் நிலையம் முன்பு திரண்டனர் தொடர்ந்து மூன்று வழக்குரைஞர்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர். காவல் அதிகாரிகள் மூவரையும் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளோம். வேறு நோக்கமில்லை எனக் கூறியதை அடுத்து வழக்குரைஞர்கள் சென்றுவிட்டார்கள்.

தொடர்ந்து இன்று சனிக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் விசாரணைக்காக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூவரையும் விருதுநகர் அழைத்துச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை நம்பியவா்கள் கெட்டதில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

தாளம்பாடியில் சாதிப் பெயருடைய தெருக்களின் பெயா் மாற்றம்

சபரிமலை தங்கக் கவச சா்ச்சை: 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை!

திருக்கோயில் திருப்பணிகளுக்கு ரூ.1,502 கோடி வழங்கிய உபயதாரா்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி தோல்வியை சந்திக்கும்: டி.டி.வி. தினகரன்

SCROLL FOR NEXT