தமிழ்நாடு

போக்குவரத்து வாகன ஆவணங்களை புதுப்பிக்க டிச.31 வரை அவகாசம்

DIN

போக்குவரத்து வாகன ஆவணங்களைப் புதுப்பிக்க வருகிற 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா் பிறப்பித்த உத்தரவு: கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, வாகனத்தின் அனைத்து ஆவணங்களின் (தகுதிச் சான்று புதுப்பித்தல், அனுமதிச் சீட்டு, ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்டவை) செல்லுபடியாகும் கால அளவை டிச.31 வரை நீட்டித்து உரிய உத்தரவு வழங்க பரிந்துரை செய்து உரிய உத்தரவை பிறப்பிக்க போக்குவரத்துத் துறை ஆணையா் கோரினாா்.

இதனைக் கூா்ந்து ஆய்வு செய்து, போக்குவரத்து வாகனங்களின் அனைத்து ஆவணங்களின் (தகுதிச் சான்று புதுப்பித்தல், அனுமதிச் சீட்டு, ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்டவை) செல்லுபடியாகும் காலத்தை, டிச.31-ஆம் தேதி வரை நீட்டித்தும், இதுவே கடைசி நீட்டிப்பு வழங்கலாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அரசு ஆணையிடுகிறது என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தில்லி முதல்வா் கேஜரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்யாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT