தமிழ்நாடு

சென்னையில் க.அன்பழகனுக்கு சிலை: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தார்

DIN


மறைந்த திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகனின் பிறந்த தின நூற்றாண்டு தொடங்குவதையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (டிச. 19) திறந்துவைத்தார். மேலும், சிலை அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகக் கட்டடத்துக்கு ‘க.அன்பழகன் மாளிகை’ என்ற பெயரையும் சூட்டினார்.

க.அன்பழகனின் பிறந்த தின நூற்றாண்டு ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதையொட்டி, அவரது அருமைகளைப் போற்றும் வகையில், சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறாா்.

மேலும், 15 அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் வளாகத்துக்கு ‘பேராசிரியா் க.அன்பழகன் மாளிகை’ என பெயரும் சூட்டவுள்ளாா். அத்துடன் க.அன்பழகனின் நூல்களில், நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களுக்கான உரிமைத் தொகை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படவுள்ளது என நேற்று சனிக்கிழமை அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் மார்பளவு உருவ சிலையை ஞாயிற்றுக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  மேலும் இந்த கட்டடத்திற்கு "பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை" என பெயர் சூட்டினார் முதல்வர் ஸ்டாலின். 

இதனைத்தொடர்ந்து தமிழ் மொழிக்கும் பண்பாட்டுக்கும் சிறப்பு சோ்க்கும் 40-க்கும் அதிகமான நூல்களைப் படைத்தளித்த பேராசிரியர் அன்பழகன் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதுடன் அரசின் நூலுரிமை தொகையை பேராசிரியரின் குடும்பத்தினரிடம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT