தமிழ்நாடு

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை: 10 பேரை பிடித்து போலீஸார் விசாரணை

DIN

வேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக் கடை கொள்ளை தொடர்பாக 10 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வேலூர் காட்பாடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக் கடை அமைந்துள்ளது. இந்தக் கடையின் தரைதள பக்கவாட்டுச் சுவரில் நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் துளையிட்டு கடந்த 15 ஆம் தேதி 15 கிலோ 500 கிராம் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். 

நகைக்கடை திருட்டில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க கண்ணன் தலைமையில் உதவி காவல் கண்காணிப்பாளா்கள், 3 துணை காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீஸாா் மாநகா் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள், தடயங்களின் அடிப்படையில் திருட்டு கும்பலை பிடிக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வந்தனர். 

இந்நிலையில், பள்ளிக்கொண்டாவை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி, மேலும் 9 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

போலீஸார் விசாரித்து வரும் 10 பேருக்கும் ஆந்திரம் கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT