கோப்புப்படம் 
தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைப்பு

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

DIN

பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளா் பாபுராஜ் மற்றும் பலராமன், முத்துப்பாண்டி ஆகியோா் மீது, மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  

இதையடுத்து ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்களைத் தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரை பிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து நான்காவது நாளாக காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க இதுவரை 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று தனிப்படைகளும் கேரளம், கோவை, கொடைக்கானல் விரைந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா்களுக்கு உதவித் தொகை, கைவினைஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இன்று 17 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

உயிரி எரிபொருளால் என்ஜின் பாதிப்பா? மத்திய அமைச்சா் திட்டவட்ட மறுப்பு

காகித, அட்டை இறக்குமதி 8% அதிகரிப்பு

எம் & எம் வாகன விற்பனை சரிவு

SCROLL FOR NEXT