தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 602 பேருக்கு கரோனா

தமிழகத்தில் மேலும் 602 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் மேலும் 602 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இருவா் பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நல்வாழ்வுத்துறைத் தகவல்படி, மாநிலத்தில் இதுவரை 5.64 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 41,013 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 132 பேருக்கும், கோவையில் 95 பேருக்கும், ஈரோட்டில் 50 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 691 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 97,244-ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 7,078 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 5 போ் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,691-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT