கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 607 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 607 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தமிழகத்தில் புதிதாக 607 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 607 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் பிரிட்டன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து தலா 2 பேர் என மொத்தம் 6 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஆந்திரத்திலிருந்து வந்த 3 பேர் மற்றும் மேற்கு வங்கத்தில் வந்த 2 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,56,84,421 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 689 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,98,628 பேர் குணமடைந்துள்ளனர். 8 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 36,707 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 6,889 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

  • சென்னை - 145
  • கோவை - 92
  • செங்கல்பட்டு - 56

மற்ற மாவட்டங்களில் 50-க்கும்  குறைவான பாதிப்புகளே பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT